அறுவைச் சிகிச்சையில் சாதனை படைத்த பேராதனை வைத்திய நிபுணர்கள்
இலங்கை மருத்துவத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, இடுப்புப் பகுதி இணைந்தவாறு ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை நீண்ட சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் பேராதனை வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகப் பிரித்துச்சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை மருத்துவத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, இடுப்புப் பகுதி இணைந்தவாறு ஒட்டிப்பிறந்த இரட்டைச் சிறுமிகளை நீண்ட சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் பேராதனை வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகப் பிரித்துச் சாதனை படைத்துள்ளனர்.
பேராதனை போதனா வைத்திய சாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியன ஒன்றிணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளன.
மாவனெல்லை, அரநாயக்கவைச் சேர்ந்த தம்பதியினருக்கு, கடந்த 2021ம் ஆண்டு இடுப்புப் பகுதி ஒட்டியவாறு லினுலி தருல்யா, லிதுலி மனுல்யா ஆகிய இரட்டைச் சிறுமிகள் பிறந்தனர்.
இவர்களுக்கு மூளை, இதயம், நுரை யீரல், கல்லீரல் ஆகியன தனித்தனியாக ஆரோக்கியமாக இருந்தபோதிலும், இரண்டு சிறுநீரகங்கள் மாத்திரமே ஒரு குழந்தையின் உடலில் அமைந்திருந்தன.
அத்துடன் இடுப்பு வளைய எலும்புகள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் 90 பாகை கோணத்தில் குறுக்கு திசையில் மிகவும் சிக்கலாகப் பிணைந்திருந்தன.
உலகளவில் இவ்வாறான 1000 சம்பவங்களில் 20 பிள்ளைகளே பிரிக் கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது இரண்டாவது தடவையாகும்.
சுமார் 5 வருட கால தொடர் ஆய்வுகளின் பின்னர், கடந்த ஜூன் 10 ஆம் திகதி சிறுவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் மாதுல ஹெட்டி ஆராச்சியின் தலை மையில் 15 பேரடங்கிய நிபுணத்துவ மருத்துவக் குழுவினர் இப்பாரிய சத்திர சிகிச்சையை ஆரம்பித்தனர்.
முதலில் கடுமையான இரத்தப் போக்கு மற்றும் நரம்புப் பாதிப்புகள் ஏற்படாதவாறு இரத்த நாளங்களும் நரம்புகளும் பிரிக்கப்பட்டன. பின்னர் கால்களுக்கான இரத்த ஓட்டத்தைப் பேணியவாறு எலும்புகள் வெற்றி கரமாகப் பிரிக்கப்பட்டன.
14 மணித் தியால பிரதான அறுவைச் சிகிச்சை யைத் தொடர்ந்து, பிரிக்கப்பட்ட இடங்களை மூடுவதற்காக மேலும் 10 மணித் தியாலங்கள் சத்திரசிகிச்சை நீடித்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே