அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் வானிலை மாற்றம்!! கொட்டித் தீர்க்கும் மழை!

#SriLanka #weather #HeavyRain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் வானிலை மாற்றம்!! கொட்டித் தீர்க்கும் மழை!

நாட்டின் பல இடங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி, ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4