மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத்துறை என்ன செய்தது? 48 மணிநேரம் மௌனம் காத்தது ஏன்? : நாமலுக்கு வலுக்கும் சந்தேகம்!
நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் அரசாங்கம் 48 மணிநேரம் அமைதியாக இருந்தமை தொடர்பில் தமக்கு சந்தேகம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த அரசாங்கம் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்காக இளைஞர்களை காரணம் எதுவுமின்றி சிறைகளில் அடைத்து வருகின்றது. சிறையில் இருக்கக் கூடிய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமே தவிர அவர்களை சிறையில் அடைப்பது சாத்தியமற்றது.
11 ஆயிரம் கைதிகள் மாத்திரம் அனுமதிக்கக் கூடிய சிறைச்சாலைகளில் மிக அதிகளவிலானோரை அடைத்து வைத்துள்ளதோடு, அவர்களை கண்காணிப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான பொலிஸ் அதிகாரிகளையே நியமித்துள்ளனர். இதன் காரணமாக சிறைச்சாலையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது.
கிட்டத்தட்ட 30 உயிர்களைக் காவு கொள்ளும் அளவுக்கு ஒரு மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத் துறை என்ன செய்தது. சம்பவத்தின் போது உடனடி உத்தரவுகள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன.
தமக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் அமைச்சரிடத்திலேயே தெரிவிக்கின்றனர். அத்துடன் சம்பவம் நடந்த 48 மணித்தியாலங்கள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் மௌனமாகவே இருந்தது. இதுகுறித்து எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே