நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு பதவி உயர்வு!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும், மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போதுவரை 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கைதிகள் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே