மன்னாரில் தரம் 5 சிறுமி ஆசிரியை அடித்ததில் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Mannar #Student #Hospital #Lanka4 #Teacher #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மன்னாரில் தரம் 5 சிறுமி ஆசிரியை அடித்ததில் வைத்தியசாலையில் அனுமதி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட மேலதிக வகுப்பின் போது, ஆசிரியை கேட்ட கேள்விக்கு மாணவி தவறான பதிலளித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும்.

ஆசிரியை சக மாணவர்களின் முன்னிலையில் மாணவியின் கன்னத்தில் மிகக் கொடூரமாகப் பலமுறை அறைந்துள்ளார். இதனால் சிறுமியின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, உட்புறமாக இரத்தக்கட்டுகளும் (இரத்தக் கண்டல்கள்) ஏற்பட்டுள்ளன.

சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோரால் அவர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியைக்கு எதிராக மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சம்பந்தப்பட்ட ஆசிரியையைக் கைது செய்ய அல்லது அவரிடம் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4