தரமான அரச சேவையைக் கட்டியெழுப்ப பரந்தளவிலான சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தல்!
பொது மக்கள் சேவைகளை மிகவும் திறமையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதற்காக அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரித்தல்.
மாவட்ட மட்டத்தில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளை நேரடியாகக் கலந்துரையாடி, அவற்றைத் தீர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல். மத்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் வரை மாவட்ட மட்டப் பணிகள் தாமதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது:
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் பாலம், வீதி அல்லது கட்டிட புனரமைப்பு போன்ற அவசரப் பணிகளை மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல், நேரடியாக மாவட்ட செயலாளர்கள் ஊடாகவே மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
இதற்காக, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரிப்பணம் மட்டுமே ஆதாரமல்ல:
மக்களின் வரிப் பணத்தை மட்டுமே நம்பி அரசாங்கத்தை கொண்டு நடத்தும் பாரம்பரிய முறை மாற வேண்டும்.
நஷ்டத்தில் இயங்கும் அல்லது செயல்திறன் குறைந்த அரச நிறுவனங்கள் முறையாக வலுப்படுத்தப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை எவ்வித அதிகாரத்துவத் தாமதமுமின்றி விரைவாக நிறைவேற்றுவதே இந்த புதிய நிர்வாக அணுகுமுறையின் முதன்மை நோக்கமாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே