மனித உடலால் உணரமுடியாத வெப்பநிலை - மட்டக்களப்பு, அம்பாறை மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Batticaloa #weather #Warning #heat #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
மனித உடலால் உணரமுடியாத வெப்பநிலை - மட்டக்களப்பு, அம்பாறை மக்களுக்கு எச்சரிக்கை!

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி,  இன்று (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்  சில இடங்களில்,  வெப்பநிலையானது  மனித உடல் உணரும் வெப்பநிலையின் அளவை விட உச்சம் தொட வாய்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

  வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. 

 எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!