நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும் பதற்றமான சூழல் - துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

#SriLanka #Police #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும் பதற்றமான சூழல் - துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

சமீபத்தில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டதை அடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும் பதற்றமான சூல்நிலை நிலவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நீர்கொழும்பு பிரிவின் பொறுப்பு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) பிமல் பெரேரா, இந்த தகவலை வெளியிட்டார்.

நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தலையிட வேண்டியேற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கைதிகள் அவரவர் சிறைகளுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன் விளைவாக நேற்றில் இருந்து சிறைவளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

இதற்கிடையில், சிறைக் கலவரத்தின் போது நீர்கொழும்பு சிறை அதிகாரிகளிடம் இருந்த ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று காணாமல் போனதாக புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சிறைக்கு வெளியே இருந்து 9மிமீ மேகசின் மற்றும் 10 தோட்டாக்களை புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4