தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்த மூவரின் வரலாறு

#SriLanka #people #Tamil #Lanka4 #Politician #Sinhala #L4
Prasu
1 hour ago
தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்த மூவரின் வரலாறு

இலங்கையில் சிங்கள மக்கள் ஒருபோதும் தாமாக வந்து தமிழர்களை தாக்கிய வரலாறு கிடையாது. அவர்களை உசுப்பேத்தி தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பியவர்களில் மூன்று முன்னணி இனவாதிகள் உள்ளனர்.

images/content-image/1783544841.jpg

கே. எம். பி. ராஜரத்ன இவர் வெலிமடை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழர்களின் தோலை உரித்து செருப்பாக அணிவேன் என்று பொது மேடைகளில் பேசியவர். 

ஜாதிக விமுக்தி பெரமுன' (தேசிய விடுதலை முன்னணி) 1950களில் அவரது மனைவியுடன் சேர்ந்து நிறுவியவர். சிங்கள பாஷா முன்னணியுடன் சேர்ந்து இயங்கியவர் (தனி சிங்கள சட்டம்) சிங்கள தேசிவாதத்துக்கு ஆரம்ப விதையை விதைத்தவர்.

மலையக மக்களை மலையகத்திலிருந்து விரட்டியடிக்க சிங்களவர்கள் தம்மோடு இணைய வேண்டும் இலங்கை சிங்கள பெளத்த நாடு அதை யாரோடும் பங்குபோட முடியாது என்று பிரசாரம் செய்தவர் வெலிமடை தொகுதியில் ஒருமுறை தேர்தல் கணக்கு காட்ட தவறியதால் குற்றவாளியாகி பதுளை நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்தி விடுதலையான நிலையில் இடைத்தேர்தலில் அவரது மனைவி குசுமா ராஜரத்னவை சிங்கள மக்கள் தேர்ந்தெடுத்தனர். 

அந்தளவுக்கு இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் புகுத்திய நபர்தான் இனவாதி ராஜரத்ன. இந்த இனவாதி 2011ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு பேசமுடியாமலேயே 83 வயதில் போய் சேர்ந்தான். இத்தனைக்கும் ஒரு ஆசிரியர் மற்றும் சட்டத்தரணியாக இருந்தவர்.

images/content-image/1783544859.jpg

சிங்கள மொழியை அரச கரும மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அதை நாடாளுமன்றம் வரை கொண்டு சென்றவர்தான் பிலிக்ஸ் ரெஜினோல்ட் ஜெயாசூர்யா

இலங்கையில் ஆங்கிலத்திலேயே கல்விகற்று அதன் ஊடாக பொருளாதார வல்லுனராக பல்வேறு ஆய்வுகளை செய்தவர் இலங்கையில் புகழ்மிக்க பொருளாதாரத்தில் பேராசிரியராவார். 

இவர்தான் 'சிங்கள பாஷா முன்னணி' (Sinhala Bhasha Peramuna) அமைப்பை உருவாக்க காரணகர்த்தாவாக இருந்தவர். அவர் "பாஷா பாய் என்று அழைக்கப்பட்டார், இனவாதி ராஜரத்னவின் வலது கை இவர்தான். 

இவருக்கு இலங்கையின் கர்மவீரர் என்று முத்திரையும் வெளியிடப்பட்டது . கிராமத்து சிங்களவர்களை ராஜரத்ன உசுப்பேத்தினார் கற்ற சிங்களவர்களை இவர் உசுப்பேத்தினார், இங்கு கல்விக்கும் இனவாதத்துக்கும் சம்பந்தமில்லை. எனினும் சிங்கள மொழியை அரச கரும மொழியாக கொண்டு வருவருவதற்கு உந்து சக்தியாக இருந்தவர் இவர்தான்.

images/content-image/1783544887.jpg

அடுத்து சிறில் மத்யூ, இவர் ஐக்கிய தேசிய கட்சியின் துணை பொது செயலாளர், ஜெஆரின் அமைச்சரவையில் இருந்தவர் இவர்.

"சிங்களவர்களே பௌத்தத்தைப் பாதுகாக்க எழுவீர்" என்ற நூலை எழுதி சிங்களவர்களை தமது உரிமைகளைக் காக்க வரும் படி அறைகூவல் விடுத்தவர். 

83 இனக்கலவரத்தில் கொழும்பில் உள்ள தமிழர்களின் சொத்துக்களுக்கு தீவைத்து . அந்த கலவரத்துக்கு முக்கிய நபராக செயற்பட்டவர்.

தமிழினம் அமைதியாக வாழ்ந்தபோதும் சிங்கள மக்கள் மத்தியில் முளைத்த விஷ காளான்களால் அந்த தேசம் மாபெரும் அழிவுகளை சந்தித்தது.

இந்த அழிவுகளுக்கு பதிலடி கொடுக்கத்தான் தமிழ் இளைஞர்களின் கைகள் மேலோங்கியது அதன் விளைவை சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் சந்தித்தார்கள். 

சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம்பேர் காயப்பட்டு உடல் உறுப்புகளை இழந்தார்கள். பல பில்லியன் கணக்கான உடைமைகள் அழிந்தன. இலங்கையை கடன்கார நாடாக்கினார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4