நீதியமைச்சருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கவில்லையா? மக்களின் பாதுகாப்பிற்கு என்ன வழி?- சஜித் சரமாரி கேள்வி!
சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் 220 லட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த போகிறது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7.7) இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை அசம்பாவிதம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடன புத்தகமான வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற புத்தகத்தில் சிறைச்சாலைகள் தொடர்பாகவும் சிறைக்கைதிகளை எவ்வாறு வழிநடத்துவது என்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெலிக்கடை , மஹர போன்ற சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து அமைச்சர் பாடம் கற்றுக்கொள்ள தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சிறைச்சாலையில் பாரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அங்குள்ள நிலைமை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்வகையில், புலனாய்வு தகவல்கள் அவருக்கு கிடைப்பதில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே