மத்திய சீனாவை தாக்கிய மேசாக் சூறாவளி - 17 பேர் உயிரிழப்பு
மத்திய சீனாவைத் தாக்கிய சூறாவளிகள் மற்றும் புயல்களால் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், "முழுமையான" மீட்புப் பணிகளுக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு குவாங்சி மாகாணத்தில், மேசாக் புயலால் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். குறைந்தது 130,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், ஆனால் 11 பேரைக் காணவில்லை என்றும் பிராந்திய அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
ஹுபேய் மாகாணத்தில் ஏற்பட்ட இடி மற்றும் கடும் காற்று காரணமாக 11 பேர் உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒருவரைக் காணவில்லை என அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
ஹுபேய் மாகாணத்தின் ஹுவாங்காங் நகரை ஒரு அசாதாரண சூறாவளி தாக்கியது. இதில் ஒரு சரக்கு போக்குவரத்து நிறுவனம் மற்றும் ஒரு கிடங்கு தாக்கியதுடன், பல லாரிகள் 30 மீட்டர் (98 அடி) வரை தூக்கி எறியப்பட்டதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே