நீர்கொழும்பு சிறைக் கலவரம் - பின்னணியில் பிரபல பாதாள உலகக் குழு தலைவரின் நண்பர் உள்ளதாக தகவல்!
#SriLanka
#Prison
#Negombo
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
நீர்கொழும்பு சிறைச்சாலையில் (Negombo Prison) ஏற்பட்ட பயங்கர மோதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களை, பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெஹெல்பெத்தர பத்மே' (Kehelbaddara Padme) என்பவரின் நெருங்கிய கூட்டாளியான 'கடுவெல்லேகம சுரேஷ்' (Katuwellegama Suresh) என்பவரே முன்னின்று வழிநடத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த மோதல் வெடித்த சந்தர்ப்பத்தில், பல்வேறு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளாக இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இடையில், இந்த பயங்கர மோதலைத் திட்டமிட்டு வழிநடத்துவதற்கு 'கடுவெல்லேகம சுரேஷ்' என்பவரே முழுமையாகச் செயல்பட்டுள்ளார் என்பது தற்போதைய விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.