அமெரிக்காவை தாக்கும் பாவி புயல் : கடும் சேதங்கள் குறித்து எச்சரிக்கை!

#SriLanka #America #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Hurricane
Thamilini
1 hour ago
அமெரிக்காவை தாக்கும் பாவி புயல் : கடும் சேதங்கள் குறித்து எச்சரிக்கை!

அமெரிக்காவை இன்று அதிகாலை சூப்பர் புயல் ஒன்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளில் அவசரகால வெளியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

 பாவி எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயலானது இன்று அதிகாலையில் மணிக்கு 257 கி.மீ (160 மைல்) வேகத்தில் காற்றுடன் கரையைக் கடக்கும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை கணித்துள்ளது. 

"மிகவும் ஆபத்தான" இந்தப் புயல் "பேரழிவை" ஏற்படுத்தக்கூடிய சேதத்தை விளைவிக்கக்கூடும் என்றும், "கனமழையால் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு" ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கடல் அலைகள் கிட்டத்தட்ட 11 மீட்டர் (35 அடி) உயரத்திற்கு எழக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு பசிபிக் பிராந்தியம் வெப்பமண்டல சூறாவளிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இத்தகைய வலிமை கொண்ட புயல்கள் அமெரிக்கத் தீவுகளுக்கு அசாதாரணமானவை என்றாலும், காலநிலை மாற்றம் சக்திவாய்ந்த புயல்களை மிகவும் பொதுவானதாக மாற்றி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4