நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது!

#SriLanka #Lanka4 #Station #Neduntheevu #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு வரலாற்றில் முதன்முறையாக நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (05) மிக விமர்சையாக நடைபெற்றது.

நெடுந்தீவுப் பகுதியின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் நீண்டகால போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கு நிலையான ஆதரவை வழங்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் திட்டத்தின் மூலம் நெடுந்தீவு மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் படும் சிரமங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4