வடக்கு, கிழக்கில் மாத்திரம் மாகாணசபை தேர்தல் : ஆட்சியை தக்கவைக்க அரசாங்கம் சூழ்ச்சி!! விமல் குற்றச்சாட்டு!

#SriLanka #Wimal Weerawansa #government #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #provincial council election
Thamilini
2 months ago
வடக்கு, கிழக்கில் மாத்திரம் மாகாணசபை தேர்தல் : ஆட்சியை தக்கவைக்க அரசாங்கம் சூழ்ச்சி!! விமல் குற்றச்சாட்டு!

அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அங்குத் தெரிவாகின்ற முதலமைச்சருக்குத் தேவையான ஆளுநரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துக் கொடுப்பார். அதன் பிறகு அவர்களுக்குத் தேவையான காணி மற்றும் பொலிஸ் அதிகார சட்டங்களை மாகாண சபை ஊடாகக் கொண்டு வருவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். 

கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இதன் மூலம அரசாங்கம் எதேர்சியாக கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முயல்வதாகவும்  விமர்சித்துள்ளார். 

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியினரை இல்லாதொழித்து,  சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாகவும், பெரும்பான்மையினரின் வாக்குகளில் 10% அல்லது 15% வாக்குகளையும் பெற்று அரசாங்கம் ஆட்சியமைக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஆட்சிய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு எந்தவொரு கீழ்த்தரமான வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசாங்கத்தின் இந்த ஆபத்தான அரசியல் ஆட்டத்தை அப்படியே வேடிக்கை பார்க்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இதனை முறியடிக்க  இந்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரளத் தயாராக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!