சவூதி நிதியுதவியுடன் உருவான சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மருத்துவ பீடம் இன்று திறப்பு!

#SriLanka #Medical #LANKA4 #University #SaudiArabia #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
சவூதி நிதியுதவியுடன் உருவான சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மருத்துவ பீடம் இன்று திறப்பு!

சவூதி அரேபியாவின் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம், இன்று (ஜூலை 4) வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சவூதி உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். இலங்கையின் பத்தாவது மருத்துவ பீடமான இத்திட்டம், பிரதான வளாகத்தில் 13 நவீன கட்டிடங்கள், விடுதிகள் மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 8 மாடி தொழிற்பயிற்சிப் பிரிவு (Professional Unit) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இது பிராந்திய ரீதியாக மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதுடன், நாட்டில் நிலவும் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய உதவும். 

சவூதி அபிவிருத்தி நிதியம் இதுவரை இலங்கையின் முக்கிய திட்டங்களுக்கு 438 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!