இலங்கையில் விபத்துகளால் தினமும் 30 பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்!

#SriLanka #Health #Accident #Minister #LANKA4 #information #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
இலங்கையில் விபத்துகளால் தினமும் 30 பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்!

சராசரியாக ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இலங்கையில் வருடாந்தம் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை விபத்துகளால் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பொதுவாக நாட்டில் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அதைத் தவிர வேறு பல முக்கிய காரணங்களாலும் அதிகளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றன.

  • உயரமான இடங்களிலிருந்து கீழே வீழ்தல்.
  • நீரில் மூழ்குதல்.
  • மின்சாரம் தாக்குதல்.
  • பாம்புக் கடிக்குள்ளாகுதல்.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு மூலம் தடுக்கக்கூடியவை ஆகும். 

எனினும், முறையான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்மையால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிர்கள் நாளாந்தம் இழக்கப்படுவது தேசிய அளவில் ஒரு பெரும் துயரம் என மருத்துவ நிபுணர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, வீடு, பணியிடம், பாடசாலை மற்றும் வீதிகள் என அனைத்து இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!