ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை!
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசித்துக் கையளிக்கப்பட்டது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு.
முன்னாள் அமைச்சருக்கு 50,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அநுராதபுரம் மாவட்ட ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 36,000 கிலோகிராம் சோள விதைகளை, தனது அரசியல் ஆதரவாளர்களுக்குப் பகிர்ந்தளித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அரசியல் லாபம் பெறும் நோக்கில் இந்த சோள விதைகளை விநியோகித்ததன் மூலம் அவர் "ஊழல்" புரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே