நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #water bill
Thamilini
2 months ago
நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு தண்ணீர்க் கட்டணங்களில் திருத்தம் இருக்காது என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக மிகப் பெரிய அளவில் செலவு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, தண்ணீர்க் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீர்க் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன. 

மேலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கும் தண்ணீர்க் கட்டணங்களைத் திருத்தி அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!