புற்றுநோய்க்கு சிறந்த மருந்து... - நடிகை மம்தா மோகன்தாஸ் பதில்

#Actress #TamilCinema #Lanka4 #Medicine #cancer #L4
Prasu
4 hours ago
புற்றுநோய்க்கு சிறந்த மருந்து... - நடிகை மம்தா மோகன்தாஸ் பதில்

இந்தோ - அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் 25 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் நடிகை மம்தா மோகன் தாஸ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய மம்தா, புற்று நோய்க்கு மருந்து இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வாழ்க்கையில் சில போராட்டங்கள் உண்மையானவை. அவை நிரந்தரமாக இருக்காது என்றும் நாம் நம்பலாம். அவை மிகவும் நீண்டவை. கடினமானவை மற்றும் சோர்வூட்டக்கூடியவை. 

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால் அவரை சுற்றி இத்தனை பேர் இருந்தாலும் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்வது தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மம்தா மோகன்தாஸ் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4