அனுர ஆட்சியில் அரசாங்க ஊழியர்கள் அவமதிப்பு : விமல் கொந்தளிப்பு!

#SriLanka #Wimal Weerawansa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
அனுர ஆட்சியில் அரசாங்க  ஊழியர்கள் அவமதிப்பு : விமல் கொந்தளிப்பு!

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். 

 கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொந்தமாக வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய எதிர்காலம் ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஆட்சியில் அவர்களுக்கு 20 கிலோ அரிசியைக் கடனாக வழங்கும் அவல நிலையே காணப்படுவதாக  சுட்டிக்காட்டினார். 

இந்த நாட்டின் அரச ஊழியர்களே திரண்டு சென்று தபால் மூலம் வாக்களித்து இந்த ஆட்சியை உருவாக்க உதவினார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இன்று அதே அரச ஊழியர்களை "திருடர்கள்" என்று அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக விமர்சித்து வருவதாகவும் தெரிவித்தார். 

 அரச ஊழியர்களை இவ்வளவு அவமதிக்கும் மற்றும் பழிவாங்கும் ஒரு நிர்வாகம் இதற்கு முன்னர் இலங்கையில் இருந்ததில்லை என்றும், இது வரலாற்றிலேயே மிக மோசமானதொரு ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4