திறைசேரியிலிருந்து மாயமான பணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை!

#SriLanka #Harsha de Silva #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
திறைசேரியிலிருந்து  மாயமான பணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை!

திறைசேரியிலிருந்து காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த இறுதி அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதிக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் தனது அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நிதிக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த அறிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாங்கள் மத்திய வங்கி மற்றும் திறைசேரியுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அவர்கள் இரண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். மத்திய வங்கியின் அறிக்கை தனியாகச் சமர்ப்பிக்கப்பட்டது. 

ஏனெனில், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. திறைசேரி தரப்பிலிருந்து பல தகவல்கள் வழங்கப்பட்டன. எனவே, நாங்கள் அதை ஆய்வு செய்தோம். நாங்கள் ஒரு வரைவை தயாரித்து, அதனை குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். 

அந்த வரைவைப் படித்து, தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்தக் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அடுத்த செவ்வாய்க்கிழமை அறிக்கையை இறுதி செய்வோம் என எதிர்பார்க்கிறோம். 

அடுத்த வாரம் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என எதிர்பார்க்கிறோம். தலைவர் என்ற முறையில், நான் விரும்பியபடி அதனை முன்வைக்க முடியாது. நாங்கள் அனைவரின் கருத்துக்களையும் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, ஒரு உடன்பாட்டிற்கு வந்து, பின்னர் அறிக்கையைச் சமர்ப்பிப்போம்” என்றார். 





உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!