கடமையின்போது கொண்டுச் சென்ற துப்பாக்கியை மீளக் கையளிக்கவில்லை - பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

#SriLanka #Police #Missing #gun #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கடமையின்போது கொண்டுச்  சென்ற துப்பாக்கியை மீளக் கையளிக்கவில்லை - பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் குறித்த அதிகாரி நேற்று (27) சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவக்க கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்து வருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4