அனுர அரசின் அதிரடி நடவடிக்கை - மீண்டும் மீண்டும் கைது செய்யப்படும் போலி புத்த பிக்குக்கள்!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
அனுர அரசின் அதிரடி நடவடிக்கை -  மீண்டும் மீண்டும் கைது செய்யப்படும் போலி புத்த பிக்குக்கள்!

சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய நால்வருக்கு, அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, துறவறத்திற்காக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, ஒப்படைக்கப்பட்ட முதல் நாள் முதல் கடுமையான தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ சம்புத்த வாலுகாராம விகாராதிபதிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 10 வயதுடைய சிறுவன் ஒருவரை கடுமையான தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கலென்பிந்துணுவௌ, சிவலாகுலம ஸ்ரீ சீவலி சைத்தியாராம விகாராதிபதிக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 உறவுமுறையில் தனது சகோதரியான 7 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கே.எஸ். சுமுது சம்பத் குமார என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 தனது காதலியின் 15 வயதுடைய மகளைக் கொடூரமான முறையில் தகாத சீண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4