சமாதான நீதவான்கள் சுய ஒழுக்கத்துடன் ஆசாரக் கொள்கைகளுக்கு உட்பட்டு கடமையாற்ற வேண்டும் - சஜித்

#SriLanka #Sajith Premadasa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
சமாதான நீதவான்கள் சுய ஒழுக்கத்துடன் ஆசாரக் கொள்கைகளுக்கு உட்பட்டு கடமையாற்ற  வேண்டும் - சஜித்

அரசியல்வாதிகளைப் போலவே சமாதான நீதவான்களையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், அவர்கள் தங்களது சேவையைச் சரியாக, சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் மற்றும் ஆசாரக் கொள்கைகளுக்கு உட்பட்டு கடமையாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 அகில இலங்கை சமாதான நீதவான்கள் சமூக அபிவிருத்தி தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தம்ம பதத்தைப் பின்பற்றித் தனது கட்சியும் இதே கொள்கையில்தான் இருப்பதாகவும், அவ்வாறு தகுந்த நற்பண்புகளுடன் செயல்பட முடியாதவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும்  அவர் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  சமாதான நீதவான் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அனைத்துப் படிகளுக்கும் தனது முழுமையான ஆதரவை வழங்குவதோடு, பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் அதற்காகக் குரல் கொடுப்பதாக   தெரிவித்தார். 

 மேலும், இந்த சமாதான நீதவான் சேவையை ஆற்றும்போது பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், சமாதான நீதவான் பதவிக்கு கல்வித் தகுதிகள் தேவை என்றாலும், அது அதற்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். 

 கல்விச் சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும் திறமையுள்ளவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள் என்றும், அதனால் கிராமங்களில் சமூகச் சேவையாற்றுபவர்களுக்கும் இதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!