வவுனியாவில் தேன் என நம்பவைத்து சீனி பாகுவை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது!

#SriLanka #Vavuniya #ARREST #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
வவுனியாவில் தேன் என நம்பவைத்து சீனி பாகுவை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது!

வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த 580 லீற்றர் சீனிப் பாணி (செயற்கைத் தேன்) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

 வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது   40 லீற்றர் கொள்ளளவு கொண்ட 7 கலன்களில் நிரப்பப்பட்டிருந்த சீனிப் பாணி மற்றும் பேரல்களில் காய்ச்சப்பட்ட நிலையில் இருந்த சீனிப் பாணி உட்பட மொத்தம் 580 லீற்றர் பாணி  மற்றும்,  பாணியை அடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெற்றுப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. 

 வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுரேந்திரனின்  ஆலோசனையின் கீழ், சிரேஸ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜெயாவின்  வழிப்படுத்தலில், நெளுக்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ம.அன்ரன் தலைமையில் பூவரசன்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் டிலுக்சன், கூமாங்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பவிந்திரன், சாஸ்திரிகூழாங்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் துவாரகன் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!