ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்!

#ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற தாய்வான் கொடியிடப்பட்ட 'எவர் லவ்லி' (Ever Lovely) என்ற வணிக கப்பல் மீது ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இந்தச் செயலை ஈரானின் "முட்டாள்தனமான மீறல்" என்று ட்ரம்ப் கண்டித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த 'எவர் லவ்லி' கப்பலின் மேல் தளத்தில் ஈரான் ஏவிய ஆளில்லா வானூர்தி தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.

எனினும், கப்பலில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, கப்பல் தனது பயணத்தைத் தொடர்ந்தது. ஈரான் மொத்தம் நான்கு ஆளில்லா வானூர்திகளை ஏவியதாகவும், அதில் மூன்றை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4