சத்தற்ற உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள இலங்கை பாடசாலை மாணவர்கள்

#SriLanka #School #Student #Health #government #Food #LANKA4 #L4
Prasu
2 months ago
சத்தற்ற உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள இலங்கை பாடசாலை மாணவர்கள்

இலங்கை பாடசாலை மாணவர்கள் தற்போது குளிர்பானங்கள் மற்றும் சத்தற்ற உணவு(JunkFood) போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ளனர்.

சமீபத்திய தரவுகள்படி, இலங்கையில் இருக்கக்கூடிய 17.4% மாணவர்கள் குளிர்பானங்கள் மற்றும் சத்தற்ற உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

சக்கரை அதிகமாக இருக்கக்கூடிய குளிர்பானங்கள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை மாணவர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றன.

இந்நிலையில், குளிர்பானங்கள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற குறிப்பிட்ட சில உணவுவகைகளை பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படவுள்ளது.

மாணவர்களை உடல் பருமன், சர்க்கரை நோய், நீரிழிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், பாடசலை தரப்பில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது போல் பெற்றோர்களும் வீட்டில் பிள்ளைகளை சில உணவு பழக்கவழக்கங்களில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!