தேசிய தினக் கொண்டாட்டங்களுக்காக செஷல்ஸ் செல்லும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 27 முதல் 29 வரை சேஷெல்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்பயணத்தின்போது, இருதரப்பு ஒத்துழைப்பின் முழுமையான அம்சங்களை ஆய்வு செய்வதற்காக அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், சேஷெல்ஸின் தேசிய தினப் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வார் என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்தக் கொண்டாட்டங்களில் இந்திய ஆயுதப் படைகளின் ஒரு குழுவும், இந்தியக் கடற்படையின் இரண்டு கப்பல்களும் பங்கேற்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இந்தப் பயணம், இந்தியாவுக்கும் சேஷெல்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த நட்பை மீண்டும் உறுதி செய்வதோடு, அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் வலுப்படுத்தும்" என்று அது கூறியது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே