போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரில் வழங்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் - சஜித் வலியுறுத்து!

#SriLanka #Sajith Premadasa #drugs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு  சிங்கப்பூரில் வழங்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் - சஜித் வலியுறுத்து!

போதைப்பொருள், போதை வஸ்துகள் மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

. இத்தகைய குற்றங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இடமில்லை என்றும்   போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரில் வழங்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களைக் கூறி அதற்கு எதிராக எதிர்க்கட்சி செயல்படுகிறது என்று ஜனாதிபதி கூறிய கதை தவறானது. 

நீதியை நிலைநாட்டும் நடவடிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சியின்படி சாத்தியமான அனைத்தையும் செய்து போதைப்பொருளை இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரைப் போன்ற கடுமையான தண்டனைகளைப் பெற்றுக் கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4