பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் - ஜனாதபதி உறுதி

#SriLanka #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும்  - ஜனாதபதி உறுதி

பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,  “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர். நீண்டநாட்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே, இவ்வருடத்துக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். 

இதற்குரிய ஏற்பாடுகளை நீதி அமைச்சு முன்னெடுத்துவருகின்றது. அதேபோல குற்ற கும்பல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும். கருத்து சுதந்திரம் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே புதிய சட்டம் அமையப்படும். 

இது மக்களின் ஜனநாயக உரிமைகளை நிச்சயம் உறுதிப்படுத்தும். இந்நாட்டின் மக்களை ஒடுக்குவதற்காக நாம் சட்டங்களை ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.” எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4