இலங்கை - அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்!

#SriLanka #America #discussion #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
இலங்கை - அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்!

அமெரிக்க - பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்புத்துறை தலைவர்கள் இடையே நேற்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நவீன போர்முறைமைகள் மற்றும் இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புசார் சவால்கள் என்பன பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், 'தீவிரமடைந்துவரும் அச்சுறுத்தல்கள், ஆளில்லா வான்வழி விமானங்கள் மற்றும் ஏனைய இயந்திரங்கள், இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் வெளிப்படையான உரையாடல்களும் வலுவான பங்காண்மையைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களாகக் காணப்படுகின்றன' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4