கலகொட அத்தே ஞானசார தேரரின் 9 மாத சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது மேல் நீதிமன்றம்!

#Gnanasara Thero #Lanka4 #HighCourt #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கலகொட அத்தே ஞானசார தேரரின் 9 மாத சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது மேல் நீதிமன்றம்!

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்திருந்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியுள்ளது.

தன்னை விடுதலை செய்யக் கோரியும், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தீர்ப்பை வழங்கினார்.

இஸ்லாத்தை அவமதித்து, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்த வழக்கில், பொலிஸார் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

விசாரணைக்குப் பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி அவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4