பணக் கஷ்டத்தில் மைத்திரி : சாதாரண மக்களை விடவும் பொருளாதார கஷ்டத்தில் இருக்கிறாராம்!
#SriLanka
#Maithripala Sirisena
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு தற்போது ஓய்வூதியம் கூட கிடைப்பதில்லை என்பதால், சாதாரண மக்களை விடவும் பொருளாதார நெருக்கடியை தாம் அதிகமாகவே உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், உங்களை விட பொருளாதார சுமை எனக்குத்தான் அதிகமாகத் தெரிகிறது. ஏன் தெரியுமா? உங்களுக்கு மாதமொருமுறை ஏதோ ஒரு சம்பளம் கிடைக்கிறது அல்லவா? ஆனால் எனக்கு இப்போது ஓய்வூதியம் கூட இல்லை.
அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. அப்படியிருக்கும் போது உங்களை விட எனக்குத்தானே வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக இருக்கும்?" என குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே