கொக்குவில் மற்றும் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் பலி!
கொக்குவில் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தனித்தனியாக நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்குவில்–பானிச்சியாடி சாலையில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி நகரில் உள்ள வட மாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகே ஏ9 சாலையில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்து பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாலையைக் கடந்து சென்ற பாதசாரி மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர் ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதசாரதி உயிரிழந்துள்ளார்.
62 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே