ஆறு மாதங்களில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்ற மியான்மர் இராணுவம்

#Murder #people #UN #Lanka4 #Myanmar #Military #L4
Prasu
3 hours ago
ஆறு மாதங்களில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்ற மியான்மர் இராணுவம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத கால தேர்தல் காலகட்டத்தில், 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழக்க மியான்மர் இராணுவமே காரணம் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய ஒரு புதிய அறிக்கையில், 702 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும் அவர்களில் 224 பெண்கள் மற்றும் 153 குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கைபடி, வான்வழித் தாக்குதல்கள் "அழிவு மற்றும் துன்பங்களுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் உட்பட 191 இறப்புகளுடன், சகாயிங் பகுதி "பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான பகுதி" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4