அனுரவின் அடுத்த மாபெரும் திட்டம் - மருத்துவ வசதிகளை விரிவாக்கும் அரசாங்கம்

#SriLanka #Hospital #government #Lanka4 #AnuraKumaraDissanayake #L4
Prasu
3 hours ago
அனுரவின் அடுத்த மாபெரும் திட்டம் - மருத்துவ வசதிகளை விரிவாக்கும் அரசாங்கம்

இலங்கையின் சுகாதார சேவைகளை மேம்படுத்தி, மக்களுக்கு உயர்தரமான மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனையின் கீழ் 1950 மில்லியன் ரூபா செலவில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 11 அதிநவீன CT ஸ்கேன் (CT Scan) இயந்திரங்களை வழங்குவதற்குப் பாரிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ​

இதன் மூலம் பக்கவாதம், விபத்துக்கள், புற்றுநோய், இதய நோய் மற்றும் இரத்த நாள நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் துல்லியமான நோய் விபரங்களைக் கண்டறிய மருத்துவர்களுக்கு வழிவகுக்கும். 

அரசாங்க மருத்துவமனைகளில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 16-Slice இயந்திரங்களுக்குப் பதிலாக, தற்போதைய மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஏற்ற 64 Slice மற்றும் 128 Slice அதிநவீன இயந்திரங்கள் பல கட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. ​

இதற்கமைய, களுத்துறை போதனா மருத்துவமனை மற்றும் குருணாகல் போதனா மருத்துவமனை ஆகியவற்றில் ஏற்கனவே புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை, காலி தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை ஆகியவற்றில் 4 புதிய இயந்திரங்களை நிறுவும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், முல்லேரியா போதனா மருத்துவமனை மற்றும் தம்புள்ளை, நாவலப்பிட்டி, சிலாபம், மன்னார் ஆகிய மாவட்ட பொது மருத்துவமனைகளுக்கும் இந்த அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாகாண சபை மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்கள் கொழும்பு போன்ற பிரதான நகரங்களுக்குச் செல்லாமல் தங்களது பிரதேசங்களிலேயே உயர்தர மருத்துவப் பரிசோதனைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4