கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 'IVF' செயற்கை முறை கருக்கட்டல் சேவை ஆரம்பம்!

#SriLanka #Kilinochchi #Hospital #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 'IVF' செயற்கை முறை கருக்கட்டல் சேவை ஆரம்பம்!

வட மாகாண மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சி இதுவரை காலமும் வட மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர் IVF போன்ற அதிநவீன மற்றும் செலவு கூடிய கருவளச் சிகிச்சை முறைகளைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பு அல்லது வெளிநாடுகளுக்கே செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இந்த புதிய முயற்சி, அந்தப் பாரிய இடைவெளியை நிரப்பியுள்ளது. யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை இத்தகையதொரு உயர் தொழில்நுட்ப மருத்துவச் சேவையை வழங்குவது இதுவே முதல் முறையாகும். 

தனியார் மருத்துவமனைகளில் பல இலட்சம் ரூபாய் செலவாகும் இந்தச் சிகிச்சையை, அரச மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்புடன் எளிய மக்களும் அணுகக்கூடிய வகையில் கொண்டு சேர்க்க இத்திட்டம் வழிவகுக்கும்.

இந்தத் திட்டம் வெறுமனே ஒரு வைத்தியசாலையின் முயற்சி மட்டுமல்ல, இது பல தரப்புகளின் கூட்டு உழைப்பாகும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மகப்பேறியல், பெண்நோயியல் மற்றும் சத்திரசிகிச்சைக் குழுவினரின் நேரடிப் பங்களிப்பு.

கனடா யாழ்ப்பாண மருத்துவப் பீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கம் (JMFOA) இதற்கான மனித வள மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது.

வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் முழுமையான ஒருங்கிணைப்பு..

1. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பெண்கள் சுகநல நிலையம்

ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 1.00 மணி

தொடர்புக்கு: 

021-221 4218,

074 280 1496


2. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் கருவளச் சிகிச்சைப் பிரிவு

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

தொடர்புக்கு: 

074 280 1496

மேலதிக தகவல்களுக்கு மேற்கண்ட தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!