ஜெர்மனியில் இருபது மாத குழந்தை மரணம் - 44 வயதுடைய இலங்கை தாய் கைது

#Death #ARREST #Women #LANKA4 #baby #Germany #SriLankan #L4
Prasu
3 months ago
ஜெர்மனியில் இருபது மாத குழந்தை மரணம் - 44 வயதுடைய இலங்கை தாய் கைது

ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்துள்ளது.

இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார். 

ஆனால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்பகுதியில் நிலவிய கடுமையான வெயில் காரணமாக, நீண்ட நேரம் மூடியிருந்த காருக்குள் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தினால் மூச்சுத் திணறி குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. 

செய்தி

சிவாசின்னப்பொடி

பாரிஸ்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!