“ஹேக்கர் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுப்பு பிரதி அமைச்சர் அனில் ஜயந்த!

#SriLanka #Minister #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
“ஹேக்கர் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுப்பு பிரதி அமைச்சர் அனில் ஜயந்த!

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்தவிருந்த 25 இலட்சம் டொலர் மோசடி: விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அவுஸ்திரேலியாவிற்கு செலுத்தப்படவிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் பணம், மோசடி கும்பல் ஒன்றின் கைகளுக்குச் சென்ற சம்பவம் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை நடவடிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து இதற்காகச் செயலாற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்தவிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் மோசடி கும்பலொன்றின் கைக்குச் சென்ற இந்தச் சம்பவம் இவ்வருடத்தின் முற்பகுதியில் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் வௌியானதை அடுத்து, நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!