உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது நானுஓயா - பதுளை ரயில் பாதை!

#SriLanka #Badulla #Railway #Lanka4 #Open #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது நானுஓயா - பதுளை ரயில் பாதை!

'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் கடந்த ஏழு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்துச் சேவை இன்று (20) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேற்கொண்ட தீவிர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, புகழ்பெற்ற 'பொடி மெனிகே' ரயிலின் வருகையுடன் இந்த ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நானுஓயா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வைத் தொடர்ந்து இந்த ரயில் பாதை பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மலைநாட்டு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது பயணிகள் நானுஓயாவிலிருந்து பதுளை வரை தடையின்றிப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிலச்சரிவுப் பாதிப்புக்குள்ளான ஏனைய பகுதிகளையும் முழுமையாகச் சீரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு முதல் பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவையைத் தடையின்றி வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4