உயிர்த்த ஞாயிறு விசாரணை: மட்டக்களப்பில் சிவில் அமைப்புகள் திடீர் போராட்டம்!

#SriLanka #Batticaloa #Protest #Easter Sunday Attack #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
உயிர்த்த ஞாயிறு விசாரணை: மட்டக்களப்பில் சிவில் அமைப்புகள் திடீர் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை நடைமுறைகள், எவ்வித அரசியல் அதிகாரங்களின் தலையீடுகளுமின்றி, சுதந்திரமான முறையில் துரிதப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்பட வேண்டும்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சிகளாகக் கருதப்படும் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) ஆகியோரின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.

அவர்கள் மூலமாக உண்மைகளும் ஆதாரங்களும் சட்டப்பூர்வமாகத் திரட்டப்பட வேண்டும். இத்தாக்குதலினால் உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தேவையான வாழ்வாதார, பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலையாகியுள்ள அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் தொடர் கண்காணிப்புகள், விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வலியுறுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!