உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு முஸ்லிம்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்: ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!

#SriLanka #Rishad Bathiudeen #Easter Sunday Attack #Muslim #LANKA4 #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு முஸ்லிம்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்: ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணரவும், சூத்திரதாரிகளைக் கண்டறியவும் தற்போதைய அநுர அரசாங்கம் எடுத்து வரும் நேர்மையான முயற்சிகளுக்கு நாட்டின் முஸ்லிம் சமூகம் தங்களின் முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என ரிஷாத் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கொடூரமான தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றமும் மறைக்கப்படக் கூடாது என்பதில் சமூகம் உறுதியாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும், அவர்களுக்கு உதவியவர்களும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாகும்.

அதேவேளையில், ஒரு சில தனிநபர்களின் மிலேச்சத்தனமான மற்றும் தீவிரவாதச் செயல்களுக்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதோ முற்றிலும் தவறானது. 

இந்த முக்கியமான கொள்கையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நீதி, உண்மை, சட்டத்தின் ஆட்சி (Rule of Law) மற்றும் பல்லின சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு நிலைநாட்டப்பட்ட ஒரு புதிய இலங்கையையே அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!