உலக சந்தையில் எண்ணெய் விலை கூடியபோது இலங்கையிலும் அதிகரிக்கப்பட்டதை போல் தற்போது குறைக்கப்பட வேண்டும்!

#SriLanka #Sajith Premadasa #prices #Oil #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
உலக சந்தையில் எண்ணெய் விலை கூடியபோது இலங்கையிலும் அதிகரிக்கப்பட்டதை போல் தற்போது குறைக்கப்பட வேண்டும்!

சர்வதேசத்தில் எண்ணெய் விலை கூடும்போது இலங்கையிலும் விலை கூடும் என்றால், உலகில் எண்ணெய் விலை குறையும்போது இலங்கையிலும் குறைய வேண்டும்.

 ஆகவே அரசாங்கம் அதிகரித்ததைப் போலவே, உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கம் எண்ணெய் விலைகளை குறைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானும் அமெரிக்காவும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. 

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள இந்த தருணத்தில், விலைகளை கூட்டியதற்கு பயன்படுத்திய சுலோகத்தை அவ்வாறே பிரயோகித்தி, நாட்டில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசாங்கம் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டும். அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய்கள், உருட்களை மட்டுமே செய்து வரக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4