கொட்டகலை திருமண மண்டபத்தில் பயங்கர மோதல்: விலக்கச் சென்ற பொலிஸார் மீது வன்முறைத் தாக்குதல்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கொட்டகலை திருமண மண்டபத்தில் பயங்கர மோதல்: விலக்கச் சென்ற பொலிஸார் மீது வன்முறைத் தாக்குதல்!

திருமண மண்டபத்தில் மோதல் முற்றியதை அடுத்து, அது குறித்து திம்புள்ள-பத்தனை பொலிஸாருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோதலைக் கட்டுப்படுத்தி, நிலைமையைக் சுமுகமாக்க முயன்றனர்.

இதன்போது, மோதலில் ஈடுபட்டிருந்த வன்முறைக் கும்பல், அதனைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக கொட்டகலை மற்றும் கிளென்கென் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமறைவாகியுள்ள மேலும் சிலரை கைது செய்ய பத்தனை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4