எரிபொருள் விலையை குறைக்க முடியாது - பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

#SriLanka #petrol #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
எரிபொருள் விலையை குறைக்க முடியாது - பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சிடையந்தாலும் அதற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என  தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஊடக சந்திப்பு நேற்று  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,   நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு தீரும் வரை நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இயலாது. 

 இருப்பினும், அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் பயன்படுத்தப்பட்ட பின்னரே விலை குறித்த முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!