தடுப்பு காவலை விட மரண தண்டனையே சிறந்தது : சுரேஷ் சலே!!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Suresh Sallay
Thamilini
3 months ago
தடுப்பு காவலை விட மரண தண்டனையே சிறந்தது : சுரேஷ் சலே!!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் மீண்டும் குற்றப் புலனாய்வு தடுப்புக் காவலுக்கு  திரும்ப விரும்பவில்லை எனக் கூறிய அவர், மரண தண்டனையே பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ் சலே, அவரது தனிப்பட்ட வழக்கறிஞர் சந்திக்கச் சென்றபோது மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பிட்ட அந்த தடுப்பு கூடத்திற்குத் திரும்ப விரும்பவில்லை என்றும், அந்த இடம் ஒரு நரகம் என்றும் கூறியுள்ள சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் இயக்குனருக்குத் தன் மீது தனிப்பட்ட விரோதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை எனவும் சுரேஷ் சலே வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், அண்மையில் சுரேஷ் சலே பகிரங்கமாக விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாள் தொடர்பான காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என, குற்றவியல் புலனாய்வுத் துறை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!