அதிவேகமே ஆபத்தானது: வீதி விபத்தில் மற்றுமொரு இளம் உயிர் பறிபோனது!

#SriLanka #Accident #Young #Road #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
அதிவேகமே ஆபத்தானது: வீதி விபத்தில் மற்றுமொரு இளம் உயிர் பறிபோனது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்தில் 35 வயதுடைய ஆனந்தராஜ் நிதர்சன் எனும் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையில் பின்னர் உறவுகளுடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4