வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சு - மதுலனுக்கு சாணக்கியன் வாழ்த்து மழை!

#SriLanka #Cricket #sanakkiyan #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான  சிறப்பான பந்துவீச்சு - மதுலனுக்கு சாணக்கியன் வாழ்த்து மழை!

IPL நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான சூப்பர் ஓவரில் அபாரமான திறமையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்திய குகதாஸ் மதுலனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

அழுத்தம் நிறைந்த தருணத்தில் பொறுப்பை ஏற்று, தன்னுடைய திறமையை உலகம் கவனிக்கும் மேடையில் நிரூபித்த விதம் மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகவும்,  உங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்து அவதானித்து வரும் ஒருவராக, நீங்கள் படிப்படியாக முன்னேறி வருவதைக் காண்பது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இளம் வயதிலேயே நீங்கள் வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த சாதனைகளுக்கான அடித்தளமாக அமையும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை எனவும் சாணக்கியன் புகழாரம் சூட்டியுள்ளார். 

 தொடர்ந்து கடினமாக உழைத்து, உங்கள் இலக்கை நோக்கி உறுதியுடன் பயணியுங்கள். மிக விரைவில் இலங்கை தேசிய அணியின் ஜெர்சியை அணிந்து, சர்வதேச அரங்கில் நாட்டைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். உங்கள் எதிர்காலப் பயணம் மேலும் பல வெற்றிகளாலும் சாதனைகளாலும் நிரம்பியிருக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!