வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்
மாகாணக் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட "அதிபர் வெற்றிடம் நிரப்புதல்" சுற்றுநிருப இல 2023/03 மற்றும் 2023/03A என்பவற்றின் ஏற்பாடுகளுக்கமைய கீழ்க்குறிப்பிடப்படும் கல்வி அலுவலகங்களில் உள்ள 1AB, 1C பாடசாலைகளில் காணப்படும் அதிபர் பதவி வெற்றிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்படுகின்றன.
இப்பதவிக்கு இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களிடமிருந்து (மிகையூழியர் சேவை தவிர்ந்த) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பபடிவங்களைப் பெற்றுக்கொள்வதோடு, விண்ணப்ப முடிவு திகதியான 2026.06.25 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
கல்விப் பணிப்பாளர்கள் தமது சிபாரிசுடன் எமக்கு கிடைக்கக்கூடியதாக "செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்." என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
நிபந்தனைகள்:
- விண்ணப்பதாரி விண்ணப்ப முடிவு திகதியிலிருந்து ஆகக்குறைந்தது 03 வருட காலமேனும் சேவையாற்றக்கூடிய வயதுஎல்லை உடையவராக இருத்தல் வேண்டும்.
- இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1 ஐச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1 இல்லாதவிடத்து இலங்கை அதிபர் சேவை வகுப்பு 2 ஐச் சேர்ந்தவர்களிலும் இலங்கை அதிபர் சேவை வகுப்பு 2 இல்லாதவிடத்து இலங்கை அதிபர் சேவை வகுப்பு 3 ஐச் சேர்ந்தவர்களிலும் தெரிவு மேற்கொள்ளப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே